* LOVE
* Grace
* Arise





அன்பு


நன்றி உணர்வு இல்லாத எனக்கு
என் தேவைகளை சந்தித்தீரே..!

பல வேளைகளில் உம்மை புறம்பே தள்ளினபொழுது
ஒரு குறைவு இல்லாமல் நடத்திநீரே..!

தகுதி இல்லாத என்னைத் தேடி வந்து
கிருபையைத் தந்து உயர்த்திநீரே..!

நான் உம்மை தேடாத காலத்திலே
என்னைத் தேடி வந்தீரே..!

உமக்கு துரோகம் செய்த நாட்களில்
மனம் இறங்கி என்னை மன்னித்தீரே..!

நான் உம்மை நேசிக்காத காலத்ததிலும்
என்னை அளவில்லாமல் நேசித்தீரே..!

என் சுயத்திற்காக உம்மை தேடினபொழுது
உம் அன்பை உணரச்செய்தீரே..!

அன்புக்காக ஏங்கிய தேடின காலத்தில்
இவ்வுலகின் அன்பு எல்லாம் மாயை என உணரச்செய்தீரே..!

உம்முடைய கையை நான் உதறித்தள்ளின பல நேரத்திலும்
என் கையைப் பிடித்து நடத்திநீரே..!


உமக்கு நன்றி இயேசப்பா 😊





கிருபை


பாவியாய் இருந்தேன் பாவத்திலே வாழ்ந்தேன்
பாவத்தை பாவம் என அறியாமல் வாழ்ந்தேன்


கவலையுடன் இருந்தேன் துக்கத்தோடே வாழ்ந்தேன்
இயேசுவே நிம்மதி என அறியாமல் வாழ்ந்தேன்


கைவிடப் பட்டேன் தோல்வியிலே வாழ்ந்தேன்
என்னைத் தூக்கிவிட யாருமில்லையே என்ற தவிப்பிலே வாழ்ந்தேன்


உம்மைத் தேடாமல் இருந்தேன் வேண்டாமல் வாழ்ந்தேன்
உம்முடைய அன்பை அறிந்தும் தெரியாதவாறு வாழ்ந்தேன்



..........ஆனால்........


தேடிப் போகாத என்னைத் தேடிவந்தீரையா..!

கிருபையைத் தந்து என்னை உயர்த்தினீரையா..!

உமது பிள்ளையாய் என்னை மாற்றினீரையா..!

சேற்றிலிருந்த என்னை தூக்கினீரையா..!

வாக்குகள் பலதந்து என்னை உயர்த்தினீரையா..!

துக்கத்திலிருந்த என்னை மகிழ்ச்சியாக்குனீரையா..!

துயரத்திலிருந்த எனக்கு ஆறுதல் தந்தீரையா..!

உமது அன்பால் என்னை மூடினீரையா..!

உம்மை நேசிக்காத என்னை நேசித்தீரையா..!

உமது விருப்பத்தை செய்ய அழைத்தீரையா..!

பாவத்தில் வாழ்ந்த என்னை புதியவனாய் மாற்றினீரையா..!

வாழ்வை ஒப்படைத்த என்னை உருவாக்கினீரையா..!

தோல்வியிலிருந்த என்னை வெற்றியாய் நடத்தினீரையா..!



உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே😊





மன்னியும் ! உயிர்ப்பியும் !



மனிதனுக்கு கொடுத்த அந்த அன்பை
உமக்கு நான் கொடுக்கவில்லையே..!


உம்மை நான் அறிந்தும் உம்மை
அறியாதது போல வாழ்ந்தேனே..!


உம்முடைய அன்பை சொல்ல வாய்ப்பிருந்தும்
அதை நான் மறுதலித்தேனே..!


வெட்கப்பட்ட இடத்தில் என்னை உயர்த்தினீர்
அதன் நன்றி உணர்வை மறந்தேனே..!


பரிசுத்தத்திற்கு என்னை அழைத்தீரே
< ஆனால்,அதற்கு சம்பந்தமில்லாமல் வாழ்ந்தேனே..!


ஆபத்தில் என் ஜெபத்தைக் கேட்டீரே
பிறகு உம்மை மறந்தேனே..!

நீர் விரும்புகிறதை செய்யாமல்
நீர் விரும்பாததையே செய்தேனே..!


எத்தனையோ அதிசயங்களைச் செய்தாரே
ஆனால்,நான் சந்தேகப்பட்டேனே..!


ஆபத்தில் நீர் என்னுடம் இருந்தீரே
பிறகு,என் சுயத்திற்காக உம்மை உதறிதள்ளிச் சென்ரேனே..!



.......இருப்பினும்.....


எனக்கு உதவிசெய்யும்..!
என்னை மன்னியும்...!
என்னை உயிர்ப்பியும் என்றேனே...!


உமது அன்பு என்னைக் கண்டதே..!

என்னை மன்னித்தே..!

என்னை உயிர்பித்ததே..!

உமக்காய் என்னை மாற்றியதே..!




உமக்கு நன்றி ஐயா😊


www.000webhost.com